பாகுபலி 2வின் உச்சகட்ட சாதனையை நெருங்கும் விஸ்வாசம்!

அஜித்தின் விஸ்வாசம் படம் கடந்த மாதம் வெளியாகி செம ஹிட் அடித்தது. 5 வாரங்களை கடந்து இன்னும் நிறைய இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிடுப்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தென் தமிழகத்தில் இப்பட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூலிலும் ஒரு மயில் கல்லை எட்டியுள்ளது.பாகுபலி-2 தமிழ் பதிப்பு மட்டுமே தமிழகத்தில் ரூ 135 கோடி வசூலை பெற்றது, இதை எந்த ஒரு தமிழ் படமும் முறியடிக்கவில்லை.

ஆனால், விஸ்வாசம் தற்போது வரை ரூ 128 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துவிட்டது.

எப்படியும் இன்னும் சில தினங்கள் இதே அளவிற்கு கூட்டம் வந்தாலே போதும், கண்டிப்பாக பாகுபலி-2 வசூலுக்கு இணையாக விஸ்வாசம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment