அஜித் ஏன் பேட்டி கொடுக்கவில்லை? முதல் முறையாக காரணத்தை சொன்ன பிரபலம்!

thala-ajith

தல அஜித் தற்போது புகழின் உச்சத்திக்கே சென்றுவிட்டார். இவருக்கு இந்திய முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருப்பது நமக்கு தெரிந்தது.

இவரின் படங்கள் எப்படி இருந்தாலும் முதல் மூன்று நாட்கள் ஹவுஸ் புல் கட்சிகளுடன் தான் ஓடும். அதே சமயம் தனது எந்தப்பட விளம்பரத்திற்கு வரமாட்டார், பேட்டி கொடுப்பதையும் நிறுத்திவிட்டார்.

அதற்கு காரணம் கோபிநாத் அஜித்தை ஒரு பேட்டி எடுக்கும் போது அவருக்கு தெரிய வந்ததாம்.

அஜித் இதுக்குறித்து கோபிநாத்திடம் கூறுகையில் ‘சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக பேசினேன், அப்போது ஒரு மாதிரி பேசினார்கள்.

சரி ஆங்கிலத்தில் பேசினேன், ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசுவதா? என்று அதற்கும் திட்டினார்கள்.

இனி பேசவே வேண்டாம் என்றேன், அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்’ என்று கூறினாராம்.

Suggestions For You

Loading...